Monday, October 18, 2010

தூசி தட்டியவை சில - பகுதி I



கவிஞன் சொன்னான் தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் 
சொன்னதால் கிடைத்ததவனுக்கு சில லட்சம் 
என்னால் ஏனோ முடியவில்லை; ஒரு பட்சம்
காதலித்திருப்பானோ கவிஞன் ஒரு பக்கம்?

வெடுக்கென பேசிக் கொண்டிருக்கையிலே 
 தடாலென வந்து நின்றாய் என் முன்னே
படபடவென பேசிட நானும் முயல
அட! தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
காதலித்திருப்பான் கவிஞன் ஒரு பக்கம்!

-------------------------------------------------------------------------------

உனது விழிக்குள் என்னைத் தேடுகின்றேன்
கண்ணாடி இட்டு மறைக்கப் பார்க்கிறாய்
ஊடுருவி நுழைய நானும் முனைவது தெரிந்ததா என்ன?
வெயிலில் போய் நிற்கிறாயே!
Automatic Sun Glasses

--------------------------------------------------------------------------------

உள்ளங்கள் மறந்தாலும்
உணர்வுகள் மரத்தாலும்
உதடுகள் மறைத்தாலும்
பேசுகின்ற கண்கள்!

-------------------------------------------------------------------------------

என்னை நீ நிந்தித்த போதும்
நான் நிசப்தமாயிருந்தேன்
அந்த ஒரு நிமிட நேரமேனும் 
என்னை நினைக்கிறாய் என்று!

--------------------------------------------------------------------------------

6 comments:

  1. Nice one!
    intha ponnukullayum etho irunthirukku paraen!!

    ReplyDelete
  2. Ada..Arumai Arumai Anju...Tamizhil Varathaigal Latcham illa.. Kodi Aagum..Kaathalipavan Kavizhan aanal :)

    ReplyDelete
  3. nandri nandri Abi! :)

    //Tamizhil Varathaigal Latcham illa.. Kodi Aagum

    i jus referred to the lines of Vairamuthu in oorvasi oorvasi from Kaadhalan!

    //Kodi Aagum..Kaathalipavan Kavizhan aanal!

    gud one Abi! :)

    ReplyDelete