Tuesday, October 13, 2009

மாலை வேளையில் ஒரு காதல் கதை


அவன் என்னை முதன்முதலாய் விட்டுப் பிரிந்த தினம். இன்னும் என் மனக் கண்ணின் முன்னால். முதலில் தொட்டுக் கொடுத்தும் விட்டுப் பிடித்தும் துவங்கிய எங்களது உறவு, எப்பொழுது இரத்தமும் சதையுமாக மாறியது என்று என்னைக் கேட்டால், மன்னிக்கவும். எனக்குத் தெரியாது. 'பொண்ணுங்க இல்லனு சொன்னா இருக்குன்னு அர்த்தம்; இருக்குன்னு சொன்னாலும் இருக்குன்னு தான் அர்த்தம் என்று சொல்லிக் கொண்டு திரியும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு Aristotleகளே! சத்தியமா எனக்கு நியாபகம் இல்லப்பா!!

நான் கல்லூரியில் போய்ச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. முதல் Practical session. கல்லூரிக் கட்டிடத்திற்கு பின்புறம் தன்னந்தனியாய் Asbestos கூரையோடு நின்ற ஒரு 10 தொடர் அறைகளைத் தான் laboratories என்று காட்டினார்கள். எங்களுடையது Pharmaceutical lab- ஆய் இருந்ததாலோ என்னவோ அந்த lab- இற்கு பின்புறம் கொஞ்சம் அதிகமாகவே செடிகொடிகள் மண்டி போயி கிடந்தன. Ointment, Tablet, Syrup என்று ஏதாவது தயாரிக்கச் சொல்வார்கள் என ஆர்வமாய்ப் போயி நின்றால், lab utensils clean செய்ய sodium lauryl sulphate வைத்து cleaning solution தயாரிக்கச் சொன்னார்கள். சரி, First session-இல் தான் இது. போகப் போக ointment எல்லாம் prepare செய்வோம் என்று நாங்களும் நம்பி களத்தில் இறங்கினோம். [4 வருடமும் cleaning solution -ஏ தான் prepare செய்து கொண்டிருந்தோம் என்பது கிளைக் கதை]

Production துவங்கிற்று. தண்ணீர் குழாய் lab-இற்கு பின்புறம் இருந்தபடியால் நானும் எனது batch mate -ம்ம் Conical flask-ஐ எடுத்துக் கொண்டு பின்புறம் சென்றோம். அவள் குழாயைத் திறந்து தண்ணீர் பிடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வினாடி! எனக்குள் ஏதோ சுருக்கென்ற ஒரு உணர்வு தாக்க சடாலென பின்னால் திரும்பினேன். அங்கே! அவன்! அவன் தானா அது? ஆம்! அவனே தான். அவன் என் கல்லூரியில்? அதுவும் என் lab- இற்கு பின்புறம். இங்கே எப்படி? என் வீட்டின் அருகாமையில் தான் இதுவரை அவனைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை எனக்காக, என் மீது உள்ள அன்பிற்காகத் தான் அவனும் இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்து இருக்கிறானோ எனப் பலவாறான எண்ணங்கள் என்னுள்ளே. பின்னர் எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழ்வதாயிற்று. இரத்தமும் சதையுமான உறவு என்று சொன்னேனே! அது இந்த 4 வருட காலத்தில் உருவானதாயி இருக்கலாம். (Aristotle களே கவனிக்க: 'இருக்கலாம்' 'May be ' Clause)

4 வருட course- ம்ம் முடிந்தது. ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் வேலை கிடைத்து , training-இல் இரவும் பகலுமாய் கண் விழித்து படித்து , exams-ஐ clear செய்து,posting கிடைத்து, அப்படி இப்படி என்று ஆயிற்று ஒன்றரை வருடம் Hyderabad வந்து. இந்த காலகட்டத்தில் அவனது நினைப்பும் கூட ஏனோ வரவில்லை எனக்கு. திடீரென நேற்றிரவு. இரவு 'போஜனம் ஆயிந்தி அக்கா' என்று attendance எல்லாம் போட்டு விட்டு, IPL க்காக TV முன்னால் ஆர்வமுடன் அமர்ந்த சிறிது நேரத்தில் மழை வந்து match-ஐ ரத்து செய்ய, மழையை கருவிக் கொண்டே படுக்கையில் விழுந்து நித்திராதேவியை நான் அனைத்துக் கொண்டிருந்த அந்த வினாடி. 6 வருடங்களுக்கு முன்னால் lab-இற்கு பின்புறம் எனக்கு தோன்றிய அதே சுருக்கென்ற உணர்வு. ஆம்! அவனே தான்!! கொசு அவனது பெயர்!!!

பி.கு: எழுத்துப் பிழைகளை மன்னித்தருள்க! blogspot -இல் இருந்து பெற முடிந்த உதவி இவ்வளவே! நல்ல tamil translator site ஏதாவது இருந்தால் அதை comment - இ உதவுக! :)

6 comments:

 1. Very nice. You can use "Kural" software for typing in tamil.

  ReplyDelete
 2. Good Blog mate .. . You might try this for typing in tamil....

  http://www.google.com/transliterate/indic/Tamil

  Have a great day

  ReplyDelete
 3. நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்கலடா நாராயணா! ;)

  you can use http://www.higopi.com/ucedit/Tamil.html for tamil converter

  ReplyDelete
 4. varugaiku nandri Muthu avargalae! :)

  tamil converterkum mikka nandri!

  ReplyDelete